Saturday, 15 May 2010
சிறுநீரகம்
வணக்கம்.!இது கோடைகாலம்.!. உங்களின் நீர் மேலாண்மையைச் செய்வதும், உயிரைக்காப்பதும் 10 செ.மீ நீளமுள்ள சிறுநீரகம்தான். இரண்டு சிறுநீரகங்களிலும் மொத்தம் 2 ,000,000௦௦௦வடிகட்டிகள் உள்ளன.ஒரு வடிகட்டியின் நீளம் 50 மி.மீ. அவைகளின் உட்பகுதி மொத்த பரப்பு.சுமாராக , 5-8 .ச.மீ . உங்கள் உடல் பரப்பை விட 3-5 . மடங்கு அதிகம். அவற்றை நீ...ட்டினால் சுமார் 70 -100 .கி.மீ . தூரம் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் /வாலாஜாபேட்டை செல்லும் தூரம்..!
இசை கருவி
வணக்கம்..!ஜெர்மனியின் உல்ம் நகருக்கு மேற்கில் ஹோஹ்லே பெல்ஸ் என்ற மலை உ ள்ளது. அதற்கு அருகில் உள்ள குகையில் 2009 .ல் மனிதன் பயன்படுத்தியஆதி காலத்தில் முழுமையான இசைக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அதுதான் கிப்பான் என்ற கழுகின் எலும்பில் செய்யப்பட்ட, புல்லாங்குழல் . அதன் வயது கி.மு..33 ,000௦.
ஆல்ப்ஸ் ..மலையின் ..ஓரத்தில்..!!அழகிய ..ரைன் நதி.. இன்நதி ..ஓரத்தில்..!!

நண்பா , நீங்கள் பார்க்கும் படம், ஆப்பிரிக்காவின், எகிப்திய பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட இயற்கை மம்மி. என்ற சொல் அரேபிய மொழியிலிருந்து வந்ததாம்..இதுதான் மிக வயதான மம்மியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் வயது சுமார் 5 ,400௦௦. கருவின் நிலையில்கவிழ்ந்து காணப்படும் இதன் பெயர், இஞ்சி மம்மி. நிறத்தை வைத்தும, முடி சிவப்பாக இருப்பதாலும் இப்படி பெயரிடப்பட்டது. இது எகிப்திய கெபெளின் பாலைவனத்தில் , இயற்கையாக மணலில் சூரிய வெப்பத்தில் கருவாடு ஆக்கப்பட்ட மம்மி. நம்ம ஊர்லே கடற்கரையிலே கருவாடு காயப்போட்டு இருப்பாங்களே .. அதுபோல்தான் இதுவும். வெயிலில் உடலின் 75 % நீர் ஆவியாகி போனபின்பு பாக்டீரியா அதன் உடலை சிதைக்க முடியாது. மம்மியின் அருகில் கிடக்கும் மண் பானைகள் ,இறந்த மனிதன் அவனின் சொர்க்க/பாதாள வாழ்க்கை வாழ உணவு, பொருள்கள் மற்றும் நீர் அவனுடன், அவனை புதைத்தவர்கள் வைத்துள்ளனர். கல்லறையின் மேல் ஏராளமான கற்கள் அடுக்கப்பட்டு இருந்தன.. என்ன ஓநாய்கள் உடலை கூறு போடாமல் இருக்கவே..!
இப்போது இது லண்டனிலுள்ள அருங்காட்சியத்தில்.. அறை எண் 64ல் ..!..
நம்ம கால காலேஜ்மேட் போல, அந்தக் கால மம்மிமேட்டும் இருந்திருக்கே..! அதாங்க இஞ்சி மம்மி போல,சம காலத்தில் , ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலை பள்ளத்தாக்கில் , ஆஸ்த்திரிய ,இத்தாலிய எல்லையிலும் இதே போல ஒரு மம்மி..!,இந்த மம்மியை மத சடங்குக்காக பலி கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அங்கே சூரியனால் பாடம் செய்யப்பட கருவாடு. இங்கே பனிக்கட்டியால் பாடம்செய்யப்பட்டது, . இதன் பெயர் ஓட்சி பனிமனிதன். வயது. 5 ,300 .இது இன் நதி ஓரத்தில் ." இஞ்சி" ரைன் நதி ஓரம்... வயிற்றிலுள்ள குடலில் சாட்டைப்புழு உள்ளதாம் ..!. உடலில் புல்லினால் ஆனா லூசாக உள்ள உடை உள்ளது. கோட், பெல்ட்தோலாலான தொப்பி ,ஒரு ஜோடி ஷுக்கள் இருந்தன. ஷுக்கள் நீர் புகாவண்ணம் , பனிக்கட்டியில் நடக்க ஏதுவாக இருகிறது . எவ்வளவு ஆச்சரியமான விஷயம்.. !! அதுவும் 5 ,300௦௦ ஆண்டுகளுக்கு முன்...!

உலக அழகி
வணக்கம். உலக அழகி என்று சொல்லப்படும் கிளியோபட்ரா, உண்மையில் அழகியல்ல.அவரே சொன்னது.எகிப்திய பாரோஹ் வம்சத்தின்.கடைசி அரசி.கி.மு. 69 -30ல் வாழ்ந்தவர். மிகவும் புத்திசாலி, ராஜ தந்திரி என்றும் பாராட்டப்படுகிறார். தன தம்பியை கி.மு 51ல் திருமணம் செய்து கொண்டார். கிளியின் வயது, 18 , தம்பிக்கு.9 .கிளிக்கு ௯ மொழிகள் தெரியும். அவ...ளது காதலன் மார்க் ஆண்டனியை வரவேற்க , கப்பலில் சென்ற பொது, அவளின் கப்பலே தெரியாதபடி, அதன் மேல் வாசனை திரவிய புகை, மேகம் போல் சூழப்பட்டு இருந்ததாம்.அவளையும் பார்க்க முடியாதபடி.!. அவளைப் பார்க்க முடியாததால் , ஆண்டனி தற்கொலை செய்து கொண்டான். அதைக்கேட்ட கிளியும், தன் மேல் கண்ணாடி விரியன் பாம்பை விட்டு , பாம்பு கொத்தியதால் இறந்தாள் கிளி, .எப்போதும் தன்னை வாசனை திரவியத்தால் முழ்கடித்து கமகம என்றே இருப்பாளாம்.அவளின் காதலர்களை கவர ஒபியம் கலந்த வாசனைப் பொருட்களையே பயன்படுத்து வாளாம். கிளி பயன்படுத்திய அதே சென்ட்டைமிகவும் முயற்சி செய்து ,அதே மூலப் பொருள்களைக் கொண்டு, ஜியுசெப்பி டோனாடோ மற்றும் ஜியுலியோ அரிப்பா இருவரும் இணைந்து, அதேவாசனையை கொண்டுவந்து விட்டனர்.எப்படி இருக்கு நம் விஞ்ஞானிகளின் திறமை..!!
நேற்று போல் இன்று இல்லை.. இன்று போல் நாளை இல்லை
நண்பர்களே.! இதோ இந்த தாத்தாவைப் பாருங்கள். இவரால் அசையக் கூட முடியாது. சிலர், நான் சொந்த ஊரைவிட்டு வரவே மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பார்கள். இதெல்லாம் நிஜமா? நான் சொல்லும் சில தகவல்களைப பார்த்த பின் நினைத்து பதில் தேடுங்கள். பூமி சுற்றுகிறது என படித்து இருக்கிறோம், யாராவது அதனை உணர்ந்தது உண்டா...? ஆனால் பூமி தன மைய நாயகனான சூரியனை நொடிக்கு சுமார் 30கி,மீ வேகத்தில் சுற்றுகிறது. அது மட்டுமா? சூரியனும் கூட தன மையத்தைச் சுற்றுகிறது என்று சொன்னால் மூளை, ரொம்ப ஆராய்ச்சி செய்து நம்ப மறுக்கும். அது சுற்றுவது மட்டும் அல்ல.. இன்னும் சில சுவையான தகவல்களும் உள்ளனவே..!
சூரியன் நம் பார்வழி மண்டலத்திலுள்ள சுமார் 30,௦௦௦000 கோடி விண்மீன்களில் ஒன்றுதான். பால்வழி மண்டலத்தின் மையத்திலிருந்து சுமார் 26,௦௦௦ 000ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.. ஒரு ஒளியாண்டு என்பது.. ஒளி ஒரு வருடத்தில் கடக்கும் தூரம் ஆகும்.ஒளியின் வேகம். நொடிக்கு 3,00௦௦,௦௦௦ 000கி.மீ. சூரியன் தன் குடும்பத்தினரான, குஞ்சு குளுவான் களான ,கோள்கள், அதன் சந்திரன்கள், குள்ளக்கோள்கள், அஸ்டி ராய்டு வளையம், குப்பியர் வளையம், அதைத்தாண்டியுள்ள மகல்லனின் மேகங்கள் மற்றும் வால்மீன்கள் எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு , ஒரு முறை பால்வழி மண்டலத்தைச் சுற்றி முடிக்க சுமார் 22 .5 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரிய குடும்பம் உருவானதிலிருந்து இது வரை 20 சுற்றுகள் வந்திருக்கின்றன.
இப்போது மீண்டும் நமது நகர்தலுக்கு வருவோம்,சூரியனின் சுற்று வேகம் நொடிக்கு சுமார், 250 கி.மீ. சூரிய குடும்ப தாய்வீடான பால்வழி மண்டலத்தின் சுற்று வேகம் நொடிக்கு சுமார் . 300 கி.மீ . நமது அண்டங்களுக்கு இடையில் உள்ளூர் தொகுதிகள் என்ற மற்ற அண்டங்களும் உள்ளன. அவைகளின் வேகம்.. நொடிக்கு 600கி.மீ.நாம் ஆடாமல் அசையாமல், அலுங்காமல் குலுங்காமல், பால் வழி மண்டலம் என்ற பிரம்மாண்டமான ரங்கராட்டினத்தில் மணிக்கு, 8 ,04 ,500௦௦ கி.மீ வேகத்தில் பறந்து கொண்டு இருக்கிறோம் நண்பா..! இதில் நான் என் ஊரைவிட்டே நகர மாட்டேன் என்பது எவ்வளவு சாத்தியம்..!நேற்று போல் இன்று இல்லை.. இன்று போல் நாளை இல்லை நண்பா.
இன்னொரு குட்டி, கொஞ்சம் பயமான தகவல்..! நமது பால் வழி மண்டலமும், நமது அடுத்த வீடான ஆண்ட்ரோமிடா காலக்ஸ்யும் ஒன்றை ஒன்று சுமார் ௩௫௦,௦௦௦ கி.மீ வேகத்தில் நெருங்கிக்கொண்டு இருகின்றன. இரண்டும் இணைந்து ஆண்ட்ரோவழி மண்டலமாகி விடுமாம்..ஆனால் இது நடக்கப் போவது பல நுறு கோடியாண்டுகள் ஆகும். போதுமா..!
--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642

.மோப்பத்தில்.. உயர்ந்த .. இனம்..?
வணக்கம். உலகம் முழுவதும், பிலட்த்ஹௌந்து எனப்படும் நாய்தான் துப்பறிவதிற்கு பயன்படுகிறது.காணாமல் போன குழந்தைகளைப் பிடிப்பதற்கு பேர் போனது. பொதுவாக நாய்கள் மனிதனைவிட் 50 மடங்கு மோப்ப சக்தி மிக்கது என்றாலும், பிலடுவிடம் ஏராளமான மோப்ப செல்கள் உள்ளன. மனிதனிடம் 10 ச.செ.மீ. .பிலடுக்கு 170 ச.செ.மீபரப்பில் மோப்ப செல்கள் உள்ளன.நீங்கள் அடுப்பங்கரையில் நுழையும்போது கறிவாசனை வந்தால் அது கொஞ்ச நேரத்தில்நமக்க்கு தெரியாமல் போய் விடுகிறது . ஆனால் மோப்ப நாய்க்கு அப்படி இல்லை. எப்படி இவை மோப்பம் பிடிக்கின்றன தெரியுமா..? நம் உடலிலிருந்து விழுந்த செல்களின் மூலம்தான்...!
உங்கள் உடலிலிருந்து தினமும் சுமார்5,00,௦௦00,00௦0௦௦௦௦ செல்கள் ஏராளமான வியர்வையுடன் கொட்டுகின்றன. ஆனால் வியர்வை/தோலுக்கு அவ்வளவு வாசனை கிடையாது. வாசனையை தானம் செய்பவை செல்களில் படிந்துள்ள பாக்டிரியாக்கள்தான் 1.௧.செ.மீ பரப்பிலுள்ள தோலில் 100௦௦-10௦,000௦௦௦ பாக்டிரியா உள்ளன.இவைதான் உங்களுக்கான தனி மணத்தைஉருவாக்குபவை. . உங்களின் வாசனை,, உங்கள் கைரேகை போல்தான்இதுவும் . தனித்துவம் உள்ளது .. பெருமை
மிக்க விஷயம்தானே நண்பா..!
பூச்சிகளும் கூட வாசனையையை அறியும். அதன் வாசனை செல்கள் அதன் உணர்கொம்பில் உள்ளது.

அறிவியலின் முன்னேற்றம்
வணக்கம். உலக மறுமலர்ச்சியின் நாயகன், லியோனார்டோ டாவின்சி. மர்மப் புன்னகை மகாராணி மோனோ லிசா தீட்டியவர்.வாழ்ந்தது கி .பி . 1452 -1519 .ஒரு சுவையான விஷயம் . இத்தாலியின் மனிதவியல் துறை, லியோனார்டோவின் ஓவியங்கலிருந்து அவரது இடது கை பெருவிரல் ரேகையினை மறு உருவாக்கம் செய்துள்ளது . வாழ்நாளில்,தீட்டிய 200 ஓவியங்களில் படிந்துள்...ள கைரேகை கொண்டு, இதனை உருவாக்கி உள்ளார்.இதிலிருந்து அவரின் உணவு, உமிழ்நீர், தாய் மூலம் அறியலாமாம் .
வேதி மாற்றங்கள்.. .சிவப்பு... சிவப்.பு .!!.
காலை வணக்கம். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சரியான விகிதத்தில்உமிழ்நீருடன் கலக்கும்போது, அது உதடுகளிலும் , நாக்கிலும் கிரிம்சன் சிவப்பு வண்ணத்தை..பூசுகின்றன.. எப்படி..? பாக்கில் உள்ள ஆரிகைன், ஆரிகொலைன் என்ற ஆல்கலைட்கள், வெற்றிலை, சுண்ணாம்புடன் உமிழ்நீர் சேரும்போது, சிவப்பு வண்ணத்தை உருவாக்குகின்றன.ஆனால் இது சிகரெட்டில் உள்ள நிகோடினுக்கு இணையானது.
பச்சை குத்தும் பழக்கம் சுமார் 14 ,௦௦௦000 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. போலி சினி யாவில் இப்பழக்கம் பிறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.5000 ஆண்டுககால களிமண் பலகையில் சான்று உள்ளது. தண்டனைக் குற்றவாளிகளை அடையாளம் காணவும் கூட பச்சை குத்தப்பட்டது. எகிப்திய பெண் மம்மிகளில் அடிவயிறு
, இடுப்பு, தொடை போன்ற இடங்களில் பச்சை குத்தப்பட்டு இருக்கிறது. பச்சை குத்தப்பட்ட பெண்களுக்கு இனபெருக்க உறுப்பு வியாதிகள் வராது என்றும், கரு துன்பகிமின்று உருவாகி, குழந்தை பிறப்பு நல்லபடி நடக்கும் என்றும் நம்பினார்கள்.

நம் முன்னோர்கள்
வணக்கம். உலகில் முதன் லிதலில் ஒலி யை உண்டாக்கிய விலங்கினம்,பூச்சிகள்தான் . அதேபோல, ஒலிகளைக் கேட்டு உணர்ந்ததும்,பூச்சிகளே.இவை சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானவை. நமக்கு ரொம்ப மூத்தவை..! உலகின் உயிரினங்களில், 95 % பூச்சி இனங்கள்தான். புவிக்கோளத்தின் உயிர் நிறையில் 20 %சமூக வாழ்க்கை நடத்தும் பூச்சிகளே. இவற்றில் 10 % எறும்புகள் 10௦% கரையான்கள்.
மாற்று திறனாளிகள்
இந்தியாவில், IAS ,IPS தேர்வில் 875 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 195, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 127பேர். முதல் 25 இடங்க ளில்தமிழகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளனர் என்பது தமிழகத்திற்கு பெருமையே. சென்னை லலிதா 12 வது இடத்திலும், நெல்லையைச் சேர்ந்த கனகவல்லி 15 வது இடத்திலும் உள்ளர்.இவர்களில் 30பேர் மாற்றுத்... திறனாளிகள். 5பேர் பார்வையற்றவர்கள் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவியுங்கள்.
பூமி போன்ற .நிறையுடைய .வேறு சூரியனின்..வெளிக்கோள்..!
பூமிதான் நமக்கு சொந்தம், பூமியின் சொந்தம் சூரிய குடும்பம்தான். அதைத்தாண்டி நம் சொந்தம்,, இரவு வானில் தெரியும்,பால்வழி மண்டலம் தான். அதெல்லாம் சரி. நம் சூரிய குடும்பம் தாண்டி, நம் பூமி அல்லது, சூரிய குடும்ப கோள்கள் போல் ஏதாவது, கோள்கள் உண்டா, அதில் மனிதர்கள் வசிக்கிறார்களா என்றெல்லாம் நாம் எண்ணிப் பார்த்து இருக்கிறோமா ? நம் குழந்தைகள் வேண்டுமானால், இப்படி கேள்வி கேட்டு நம்மை மடக்கி, திணறடித்து இருக்கின்றன. நாம் பதில் தெரியாமல் முழித்து இருக்கிறோம்.. உண்மை நிலைதான் என்ன?
நம் சூரிய குடும்பம் தாண்டி ஏராளமான சூரியன்களும், அதைச் சுற்றிக்கொண்டிருக்கும், கோள்களும் உள்ளன. நாம் அவற்றை, வெளிக்கோள்கள் என்று அழைக்கிறோம். நேற்றைய தேதி வரை, அதாவது, 2010 , மே 14 ம் நாள் வரை, 454 வெளிக்கோள்களை வானவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை, நமது வியாழன் போல பெரிய அண்ணாச்சிகள்தான். இவற்றை இவைகளின் பிம்பம் மூலம் அறிவதைவிட. இன்றைய நவீன தொழில் நுட்ப சாதனங்கள் மூலம்தான் கண்டு பிடித்துள்ளனர்.அதுதான், எல்லா சூரிய குடும்பங்களும் ஒன்றை விட்டுஒன்று விலகிச் சென்றுகொண்டே இருக்கின்றன. இவ்வாறு விலகிச் செல்வதனை,radial velocity என்ற விலகல் தொலைவு மூலம் அறிய முடியும். அதன் விலகல் தொலைவினை, சிவப்பு விலகல்/ நீல விலகல். மூலம் அறிந்து கொள்கின்றனர். சிவப்பு விலகல் நிகழ்ந்தால்,அப்பொருள் விலகிச் செல்கிறது என்றும், நீல விலகல் தெரிந்தால் பொருள் நம்மை நெருங்கி வருகிறது என்றும் அறியலாம்
எல்லா சூரியன்களும் விண்மீன்களே.. எல்லா விண்மீன்களும் சூரியன்கள்தான். Radial velocity மூலம் , மற்ற சூரிய குடும்பத்தின் ஜாதகத்தையே கூட நிர்ணயித்துவிட முடியும். எனவே, இதன் மூலம் அந்த விண்மீன்களின் நிறை,(எடையல்ல),அவற்றைச் சுற்றும் கோள்கள்/பொருள்கள், அவைகள் சுற்றும் நீள்வட்டம்,அவைகளின் நிறை, உருவ நிர்ணயம், விட்டம், சுற்றும் கால அளவு , இன்ன பிற விஷயங்கள் யாவையும் அறிந்து கொள்ள முடிகிறது. அம்மாடியோவ் .. எவ்வளவு தகவல்கள்,,! பல ஒளியாண்டுகள் தொலைவில் ஓடிக்கொண்டு இருக்கும்,அனைத்தையு ம்,நாம் கண்ணால் காணாமலேயே, நிறத்தின் ஜாலம் மூலம் அறிய முடிகிறதென்றால்..அறிவியலின் அற்புதத்தை.. வியக்க, புகழ .. வார்த்தைகளே இல்லை எனலாம்.
வெளிகோள்கள் இருப்பதை 1989 ல் அனுமானித்து, 1992 ல் நிச்சயமாய் கண்டுபிடித்தனர். அது பெகாசி விண்மீன் படலத்தில் உள்ளது. நம் சூரியன் போல 10 % விண்மீன்களுக்கு கோள்கள் உள்ளனவாம். அதுவும், சமீபத்தில்2010 ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிளிஸ் 581 என்ற சிவப்பு அரக்க விண்மீனின் 4 வது கோள், நமது பூமி போன்ற பாறைக்கோள் எனவும், அதில் உயிர்கள் வாழக்கூடிய சுழல் காணப்படு வதாகவும் தெரிகிறது.. இங்கு பெரும்பாலான வெளிக்கோள் கள் கொதிக்கும் வியாழன்களாகவே உள்ளன.நம் சூரியன் போன்ற 3 % -5 %விண்மீன்களுக்கு அசுர கோள்களே உள்ளன. அவையும் ௧௦௦ நாட்களில் தன மைய சூரியனை சுற்றி முடிக்கின்றன. இவைகளில் 40% சூரியன்களுக்கு குறைந்த நிறை உள்ள கோள்கள் இருக்கின்றன.
சிலி நாட்டின் லாசில்லா என்ற இடத்தில், ஐரோப்பிய தெற்கு வானோக்ககம் உள்ளது. இங்கு 3.6 மீ விட்டமுள்ள தொலைநோக்கி மூலம் மிச்சல் மேயர் என்பவரின் குழு, 2009, ஏப்ரல் 21 ம் நாள் ஒரு கோளை கண்டுபிடித்தது..இது கிளிஸ் 581 ன் 5 வது கோளாகும் இது நம் பூமி போல 1 .9 நிறை உள்ளது. இதுவரை கண்டுபிடித்துள்ள வெளிக்கோள் களில் இதுதான் மிகச் சிறியது. கிட்டத்தட்ட நம் பூமியின் நிறை..!இதன் மேற்பரப்பு பாறை போன்று உள்ளது. மேலும் இது தன் தாய் விண்மீனை 0௦.௦03வானியல் அலகில், மிக நெருக்கமாக சுற்றிக்கொண்டு இருக்கிறது. .அதனால் இங்கே உயிர்கள் வாழ்வதற்கான வளிமண்டலமோ, வெப்ப நிலையோ இல்லை. ஏனெனில், இது தன் தாய் சூரியனை வெகு நெருக்கத்தில் சுற்று வதால், இதன் வெளி வெப்பம் அதிகமாக இருக்கின்றது.
சுற்றும் காலம் 3 .15 நாட்கள் மட்டுமே..!
--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642
எல்லா சூரியன்களும் விண்மீன்களே.. எல்லா விண்மீன்களும் சூரியன்கள்தான். Radial velocity மூலம் , மற்ற சூரிய குடும்பத்தின் ஜாதகத்தையே கூட நிர்ணயித்துவிட முடியும். எனவே, இதன் மூலம் அந்த விண்மீன்களின் நிறை,(எடையல்ல),அவற்றைச் சுற்றும் கோள்கள்/பொருள்கள், அவைகள் சுற்றும் நீள்வட்டம்,அவைகளின் நிறை, உருவ நிர்ணயம், விட்டம், சுற்றும் கால அளவு , இன்ன பிற விஷயங்கள் யாவையும் அறிந்து கொள்ள முடிகிறது. அம்மாடியோவ் .. எவ்வளவு தகவல்கள்,,! பல ஒளியாண்டுகள் தொலைவில் ஓடிக்கொண்டு இருக்கும்,அனைத்தையு ம்,நாம் கண்ணால் காணாமலேயே, நிறத்தின் ஜாலம் மூலம் அறிய முடிகிறதென்றால்..அறிவியலின
வெளிகோள்கள் இருப்பதை 1989 ல் அனுமானித்து, 1992 ல் நிச்சயமாய் கண்டுபிடித்தனர். அது பெகாசி விண்மீன் படலத்தில் உள்ளது. நம் சூரியன் போல 10 % விண்மீன்களுக்கு கோள்கள் உள்ளனவாம். அதுவும், சமீபத்தில்2010 ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிளிஸ் 581 என்ற சிவப்பு அரக்க விண்மீனின் 4 வது கோள், நமது பூமி போன்ற பாறைக்கோள் எனவும், அதில் உயிர்கள் வாழக்கூடிய சுழல் காணப்படு வதாகவும் தெரிகிறது.. இங்கு பெரும்பாலான வெளிக்கோள் கள் கொதிக்கும் வியாழன்களாகவே உள்ளன.நம் சூரியன் போன்ற 3 % -5 %விண்மீன்களுக்கு அசுர கோள்களே உள்ளன. அவையும் ௧௦௦ நாட்களில் தன மைய சூரியனை சுற்றி முடிக்கின்றன. இவைகளில் 40% சூரியன்களுக்கு குறைந்த நிறை உள்ள கோள்கள் இருக்கின்றன.
சிலி நாட்டின் லாசில்லா என்ற இடத்தில், ஐரோப்பிய தெற்கு வானோக்ககம் உள்ளது. இங்கு 3.6 மீ விட்டமுள்ள தொலைநோக்கி மூலம் மிச்சல் மேயர் என்பவரின் குழு, 2009, ஏப்ரல் 21 ம் நாள் ஒரு கோளை கண்டுபிடித்தது..இது கிளிஸ் 581 ன் 5 வது கோளாகும் இது நம் பூமி போல 1 .9 நிறை உள்ளது. இதுவரை கண்டுபிடித்துள்ள வெளிக்கோள் களில் இதுதான் மிகச் சிறியது. கிட்டத்தட்ட நம் பூமியின் நிறை..!இதன் மேற்பரப்பு பாறை போன்று உள்ளது. மேலும் இது தன் தாய் விண்மீனை 0௦.௦03வானியல் அலகில், மிக நெருக்கமாக சுற்றிக்கொண்டு இருக்கிறது. .அதனால் இங்கே உயிர்கள் வாழ்வதற்கான வளிமண்டலமோ, வெப்ப நிலையோ இல்லை. ஏனெனில், இது தன் தாய் சூரியனை வெகு நெருக்கத்தில் சுற்று வதால், இதன் வெளி வெப்பம் அதிகமாக இருக்கின்றது.
சுற்றும் காலம் 3 .15 நாட்கள் மட்டுமே..!
--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642
தங்கமே.. தங்கம்
அதிகாலை வணக்கம். ஒரு தகவல் கிடைத்தது. அந்த ஊரில் இந்தியர்கள் வாழும் வீட்டுக்குத்தான் திருடர்கள் வருவார்களாம். மற்றவர்களிடம் தங்கம் கி டையாதே ..அதனால்தானாம்.
மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய உலோகம் தங்கம்தான். ஆதிகால இன்கா நாகரிகத்தினர் தங்கத்தை சூரியனின் கண்ணீர் என்றே அழைத்தனர். மனிதன் அதனை பணமாகப் பயன்படுத்தாததிற்கு முன்பே அது மதிப்பு வாய்ந்த உலோகமாக கருதப்பட்டது. பண்டைய சுமேரியர்கள்தான் தங்கத்தைப் புனித பொருளாக , ஆபரணமாக , அலங்கார கருவிகளாக சுமார் 7 ,000௦௦௦ ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தினார்கள். அதே கால கட்டத்தில் துவக்க கால எகிப்தியர்களும் பழங்கால உலகின் தங்கம் உற்பத்தி பண்ணும் நாகரிக மனிதர்களாகவும், பணக்காரர்களாகவும் இருந்தனர். சுத்தப்படுத்தப்பட்ட தங்கத்தில் நாணயம் செய்தவர்கள் எகிப்திய அரசர்களின் 6வது வமிசம்தான். காலம் கி.மு. 2 ,700 -2 ,270 .எகித்திய பாபிரஸ் சுருளில் நுபியாவில் பெரிய தங்க சுரங்கம் உள்ளது குறிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில்தங்க நாணயத்தை கி.மு 700 களிலேயே தயாரித்தது லிடிய வியாபாரிகள்தான். பின்னரே அனைவரும் பயன்படுத்தும் படியான தங்க நாணயங்களை செய்தது பழங்கால லிடிய அரசனான குரோசஸ் தான் (கி.மு. 560 -546 ). அவர் வெளியிட்ட நாணயங்களில் ஒரு புறம் சிங்க உருவமும், மறுபுறம் எருதும் காணப்பட்டது. மேலும் இது உலகம் முழுவதும் பயன்படும் பண்டமாற்று நாணயமாகவும் இருந்ததுதான் சிறப்பு அம்சம்.
தங்கம் பாரம்பரியமாக troy ouncesஎன்ற அளவீட்டுப்படியே வழங்கப்படுகிறது.இது 31 .1035 கிராமுக்கு சமமாகும். மேலும் பழங்காலத்தில், காரோப் என்ற விதையை அளவீடாக பயன்படுத்தியதால், அதன்படி சர்வதேச அரங்கில் காரட் என்று சொல்லப்படுகிறது.மக்கள் ஆதிகாலத்தில் , தங்கத்தை தங்க துணுக்கு களாகத்தான் பொறுக்கி எடுத்தார்களாம் . அது காரட் மதிப்பில் சுமார் 20 -22காரட் தான் இருக்குமாம், ஆஸ்திரேலியா வில் தான் 23 காரட்
உள்ள தங்கம் கிடைக்கிறதாம்.
தங்கத்தின் விலை ஏன்இப்படி கொடி கட்டிப் பறக்கிறது தெரியுமா? ஒரு கிராம் தங்கம் தயாரிக்க ஏராளமான செலவுதான். தங்க சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் 860 தங்கத் தாதுவிலிருந்து கிடைப்பது வெறும் 30௦ கிராம் தங்கம்தான்.தங்கம் கிடைக்கும் இடத்திலிருந்து சுரங்கம் தோண்ட , வெட்டி எடுக்க , அதனை சுத்தப்படுத்த என ஏராளமான
செலவுகள்.. எனவேதான். தங்கம் கனமாக இருந்தும், அதன் விலை இப்படி ராக்கெட்டைவிட உயரத்தில் பறக்கிறது. ௦2009ம் ஆண்டு கணக்குப்படி , இதுவரை மனித வரலாற்றில் சுமார் 161 ,௦௦௦ 000டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனை 5,175 , 000troy ounce என்கிறார்கள்.
உலகின் தங்க சேமிப்பு உள்ள இடம் நியூ யார்க்கிலுள்ள பெடரல் வங்கிதான்.இங்கே சுமார் 269 ,௦௦௦000,000௦௦௦ troy ounce தங்கம் உள்ளது. இது சுமாராக உலகின் 25 %-30 % தங்கமாகும்.பெடரல் வங்கி மன்ஹாட்டன் தீவில் தெருவுக்கு 80அடி ஆழத்தில் கடல் மட்டத்திற்கு கிழே 50 அடி ஆழத்தில் இந்த வைப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் பெரிய தங்க சுரங்கம் தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு ராண்டுதான், இதன் பரப்பு 12,௦௦௦ 000ஏக்கர். இதிலுள்ள தங்க சுரங்க டன்னலின் நீளம் 40 ,000௦,௦௦௦ கி.மீ.உலகின் அதிக தங்க உற்பத்தி செய்யும் நாடு சீனாதான். போன ஆண்டு மட்டும் 260 டன் உற்பத்தி. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடம்தான்.
ஒரு துணுக்குச் செய்தி: ஹவாயிலுள்ள கேச்ட் வானோ க்கு நிலையத்தில் உள்ள தொலைநோக்கியில் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி உள்ளதாம். இதில் நெப்டியூன் மற்றும் புளுட்டோவின் பிம்பங்கள் நன்றாகத் தெரிகிறதாம். நவீன மருத்துவத் துறையிலும் , கீல்வாதம், வீக்கம், டி.பி போன்ற நோய்களுக்கு வலி நிவாரணியாக தங்கம் பயன்பாட்டில் உள்ளது.. நண்பர்களே.. போதுமா.?. தங்கத்தின் புராணம். .!

மனிதனின் பரிணாமம்
வணக்கம் பரிணாமத்தைப் புரட்டினால் சில ஆச்சரியங்கள்!மனிதனும், சிம்பன்சியும் பிரிந்தது 50,௦௦00,000௦௦௦ ஆண்டுகளுக்கு முன். ஆனால், மனிதனின் சீலைபேன் ,மனிதன் உடை எப்போது உடுத்த ஆரம்பித்தான் என்பதை சொல்கிறது மனிதன் முடியை, 170 ,0௦௦௦௦௦00ஆண்டுகளுக்கு முன்பே இழந்தான்.அப்போது அவன் உடலில் சீலை பேன் காணப்பட்டது. இ து தலைப் பேனிலிருந...்து உருவானது. எனவே மனிதன் அதற்கு முன்பே உடை அணிந்தான் என தெரிந்தது.
..உலகின் முதல் கட்டிட கலைஞன்.யார் தெரியுமா ..?
உலகின் முதல் கட்டிட கலைஞன் கரையான்தான். மழைக்கால இரவில் பறக்கும் ஈசல் கூட்டம் இணை தேடித் பறக்கும் கரையான்களே. கரையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் கூறுவர். ஆனால் இதன் குணம் எதுவும் எறும்புடன் தொடர்பு உடையது கிடையாது. பொதுவாகவே பூச்சிகள் புரத சத்துகள் நிறைந்தவை. இதில் கரையான்கள் அதிக புரதம் உள்ளவை. இன்றும்கூட சில கிராமங்களில் உள்ள மக்களும், பழங்குடி மக்களும், ஈசலைப் போருக்கு , பொறித்து, பொரியுடன் கலந்தும், தின்பண்டமாகவும், உண்ணுகின்றனர்.
ஆப்பிரிக்க காடுகளில் கரையான் புற்றுக்கள் உயரமாக காணப்படுகின்றன. நம் ஊரில் பாம்பு புற்று என பய பக்தியுடன், மக்கள் பால் முட்டை வைத்து வழிபடும் புற்றுக்களும், கரையான் புற்றுக்களே. சில வகை கரையான் புற்றுக்கள் 9 மீட்டர் உயரம் கூட இருக்கும். இவைகளை யாரும் எளிதில் உடைக்கவோ , தகர்க்கவோ முடியாது. கரையான் புற்றுக்கள் அவ்வளவு உறுதியானவை. கரையான் காட்டுக்குள் வெகுதூரம் சென்று தன கூட்டிற்குத் தேவையான கற்களைத் தேடித் பொறுக்கி, எடுத்து சுமந்து வருகிறது. அவற்றைத் தேய்த்து, தேய்த்து அழகாக செம்மை செய்து , மண்ணிற்கு ஊடே அடுக்கி வைத்து கூடு /புற்று கட்டுகிறது. வெகு துரத்திலுருந்து, தாவரப் பொருள்கள் , பேப்பர் மற்றும் தண்ணீரும் சுமந்து வந்து, அதனுடன் உமிழ் நீரைக்கலந்து,புற்றை உருவாக்குகிறது.
கரையான் புற்றை உருவாக்குவதும், அதனை, பாதுக்காத்து, பராமரிப்பதுவும் வேலைக்கார கரையான்களே. சாதாரண கரையான் புற்றுக்களில் ஏராளமான சங்கதிகள் அடங்கியுள்ளன. குழந்தை கரையான்களை வளர்க்க ,தனி அறைகள் உள்ளன. நீர் சேமித்தல் , ஆழ்தள இணைப்புத தளம், குளிர்சாதன வசதி, கரியுமில வாயு-ஆக்சிஜன் சமனப்படுத்தி கட்டுக்குள் வைத்திருத்தல் , இனப்பெருக்க அறை, விவசாய அறை, உணவு சேமிப்பு அறை என நிகரற்ற நவீன வசதிகள் உள்ள நாகரிகம் மிக்க மனித இனம் போல் பல்வேறு அதிசயத்தக்க அற்புதமான் வடிவமைப்புக்கள் கரையான் புற்றுக்குள் உள்ளன. இவைகளின் பழக்க வழக்கங்கள் நம் கற்பனைக்கும் மிஞ்சியவை.
சில வகை கரையான்கள் தங்களின் புற்றுக்குள் காளான்களை வளர்க்கின்றன. அவற்றை வளர்ப்பதர்கான் படுக்கையை தாவரப் பொருள்களைக் கொண்டு உருவாக்குகின்றன. காளான்கள் அதிகமாகி விட்டால் அவற்றை, பிரித்தெடுத்து வேறு இடத்தில் வைத்து வளர்க்கின்றன. சிப்பாய் கரையான்களுக்கு கண் பார்வை கிடையாது. தென்னாப்பிரிக்கவிலுள்ள கரையான் புற்றுகள் கடல் மட்டத்திளிருந்து 1 ,800 அடி உயரத்தில் இருக்கும்.சில கரையான்கள் வடக்கு தெற்காகவே புற்றுக்களை கட்டுகின்றன.கரையான் புற்றுக்களின் வெப்ப நிலை 10 -15 பாகை மட்டுமே . கரையான் புற்றுக்களை பார்த்து, அதன்படி கூட, இன்று கட்டிடங்களின், குளிருட்ட வசாதி செய்யப்படுகிறது. தரைக்கு அடியில் உள்ள நீர் வள இடங்களை , கரையான் புற்றுக்கள் மூலம் அறிய முடியும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இவைகளின் அனைத்து தகவல்களும் இவைகளின் மூளைக்குள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன்.சின்ன மூளைக்குள் எத்தனை கோடி விஷயங்கள்.. இவை நம்மை விட 5 கோடி .வருடங்கள் வயதானவை.

Subscribe to:
Posts (Atom)