காலை வணக்கம்..!வரலாறு எழுதப்படும் காலத்துக்கு முன்பிருந்தே உப்பு பயன்படுத்தப்படுகிறது. புதிய கற்கால மனிதர்கள் கி.மு 9 ,000 ல் உப்பை உபயோகித்தனர்.சீனாவில் கி.மு 6,000௦௦௦ களிலேயே . துவக்க கால எழுத்துக்களில் 40 வகை உப்பு இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. முதன் முதலில் உப்புக்காக வரி போட்டவர் சீனப் பேரரசர் ஹுவால்டிதான். சீனாவில் உப்புக்கட்டி நாணயமாக பயன்பட்டது. பழங்கால எகிப்தியர்கள் கருவாடு ஏற்றுமதி செய்தனர். பண்டமாற்று பொருளாக லெபனான் சீடர் எண்ணெய் மற்றும் கண்ணாடி பெற்றனர். சஹாராவில் உப்பு வாணிகத்துக்காக போக்குவர த்து தடம் போட்டனர். ரோமானியர்கள் இராணுவ வீரர்களுக்கு உப்பை சம்பளமாக வழங்கினர். அதனாலேயே, சம்பளத்துக்கு (salary ) என்று அழைக்கப்பட்டது. நெப்போலியன் ரஷ்யாவிலிருந்து குளிருக்குப் பயந்து, படைகளுடன் திரும்பிய போது, காயத்திற்கு போட உப்பு இல்லாததாலேயே நிறைய வீரர்கள் உயிர் துறந்தனர்.
No comments:
Post a Comment