amazon associates

amazon associates

Pages

Saturday, 15 May 2010

..உலகின் முதல் கட்டிட கலைஞன்.யார் தெரியுமா ..?

உலகின் முதல் கட்டிட கலைஞன் கரையான்தான். மழைக்கால இரவில் பறக்கும் ஈசல் கூட்டம் இணை தேடித் பறக்கும் கரையான்களே. கரையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் கூறுவர். ஆனால் இதன் குணம் எதுவும் எறும்புடன் தொடர்பு உடையது கிடையாது. பொதுவாகவே பூச்சிகள் புரத சத்துகள் நிறைந்தவை. இதில் கரையான்கள் அதிக புரதம் உள்ளவை. இன்றும்கூட சில கிராமங்களில் உள்ள மக்களும், பழங்குடி மக்களும், ஈசலைப் போருக்கு , பொறித்து, பொரியுடன் கலந்தும், தின்பண்டமாகவும், உண்ணுகின்றனர்.
ஆப்பிரிக்க காடுகளில் கரையான் புற்றுக்கள் உயரமாக காணப்படுகின்றன. நம் ஊரில் பாம்பு புற்று என பய பக்தியுடன், மக்கள் பால் முட்டை வைத்து வழிபடும் புற்றுக்களும், கரையான் புற்றுக்களே. சில வகை கரையான் புற்றுக்கள் 9 மீட்டர் உயரம் கூட இருக்கும். இவைகளை யாரும் எளிதில் உடைக்கவோ , தகர்க்கவோ முடியாது. கரையான் புற்றுக்கள் அவ்வளவு உறுதியானவை. கரையான் காட்டுக்குள் வெகுதூரம் சென்று தன கூட்டிற்குத் தேவையான கற்களைத் தேடித் பொறுக்கி, எடுத்து சுமந்து வருகிறது. அவற்றைத் தேய்த்து, தேய்த்து அழகாக செம்மை செய்து , மண்ணிற்கு ஊடே அடுக்கி வைத்து கூடு /புற்று கட்டுகிறது. வெகு துரத்திலுருந்து, தாவரப் பொருள்கள் , பேப்பர் மற்றும் தண்ணீரும் சுமந்து வந்து, அதனுடன் உமிழ் நீரைக்கலந்து,புற்றை உருவாக்குகிறது.
கரையான் புற்றை உருவாக்குவதும், அதனை, பாதுக்காத்து, பராமரிப்பதுவும் வேலைக்கார கரையான்களே. சாதாரண கரையான் புற்றுக்களில் ஏராளமான சங்கதிகள் அடங்கியுள்ளன. குழந்தை கரையான்களை வளர்க்க ,தனி அறைகள் உள்ளன. நீர் சேமித்தல் , ஆழ்தள இணைப்புத தளம், குளிர்சாதன வசதி, கரியுமில வாயு-ஆக்சிஜன் சமனப்படுத்தி கட்டுக்குள் வைத்திருத்தல் , இனப்பெருக்க அறை, விவசாய அறை, உணவு சேமிப்பு அறை என நிகரற்ற நவீன வசதிகள் உள்ள நாகரிகம் மிக்க மனித இனம் போல் பல்வேறு அதிசயத்தக்க அற்புதமான் வடிவமைப்புக்கள் கரையான் புற்றுக்குள் உள்ளன. இவைகளின் பழக்க வழக்கங்கள் நம் கற்பனைக்கும் மிஞ்சியவை.
சில வகை கரையான்கள் தங்களின் புற்றுக்குள் காளான்களை வளர்க்கின்றன. அவற்றை வளர்ப்பதர்கான் படுக்கையை தாவரப் பொருள்களைக் கொண்டு உருவாக்குகின்றன. காளான்கள் அதிகமாகி விட்டால் அவற்றை, பிரித்தெடுத்து வேறு இடத்தில் வைத்து வளர்க்கின்றன. சிப்பாய் கரையான்களுக்கு கண் பார்வை கிடையாது. தென்னாப்பிரிக்கவிலுள்ள கரையான் புற்றுகள் கடல் மட்டத்திளிருந்து 1 ,800 அடி உயரத்தில் இருக்கும்.சில கரையான்கள் வடக்கு தெற்காகவே புற்றுக்களை கட்டுகின்றன.கரையான் புற்றுக்களின் வெப்ப நிலை 10 -15 பாகை மட்டுமே . கரையான் புற்றுக்களை பார்த்து, அதன்படி கூட, இன்று கட்டிடங்களின், குளிருட்ட வசாதி செய்யப்படுகிறது. தரைக்கு அடியில் உள்ள நீர் வள இடங்களை , கரையான் புற்றுக்கள் மூலம் அறிய முடியும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இவைகளின் அனைத்து தகவல்களும் இவைகளின் மூளைக்குள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன்.சின்ன மூளைக்குள் எத்தனை கோடி விஷயங்கள்.. இவை நம்மை விட 5 கோடி .வருடங்கள் வயதானவை.
வடக்கு தெற்காக அமைந்துள்ள கரையான் புற்றுக்கள் .
பெரிய கட்டிடம உயர கரையான் புற்று .
உயரமான கரையான் புற்று .

No comments: