நண்பர்களே.. வணக்கம். !விடிகாலையில் எழும் பழக்கம் உண்டா? 5 மணிக்கு கொஞ்சம் எழுந்து, தென் கிழக்கு வானைப் பாருங்கள். லேசான பிறைச் சந்திரனுக்கு கீழே பளிச் என தெரிவது. வாயு அரக்கன் எனப்படும், வியாழன் கோள். அதன் தலைக்கு மேலே ஒரு முற்றுப் புள்ளி போல் தெரிவது அதன் துணைக்கோள். அதனை, உங்களிடம் சிறிதாக ஒரு இருகண்நோக்கி(Binocular ) இருந்தால், அதன் மூலம் பாருங்கள்.. அந்த சின்ன புள்ளி மெதுவாக நகர்ந்து வியாழனை சுற்றி வருவது தெரியும். மேலும் இரண்டு துணைக்கோள்களும் தெரியும். வெறும் கண்ணுக்கு ஒரு துணைக்கோள் தான் தெரியும். கோளையும், அதனைச் சுற்றும் துணைகோளையும் நாமே நேரில் பார்ப்பது த்ரில்லிங் ஆன விஷயம்தானே.
No comments:
Post a Comment