amazon associates

amazon associates

Pages

Saturday, 15 May 2010

நேற்று போல் இன்று இல்லை.. இன்று போல் நாளை இல்லை



நண்பர்களே.! இதோ இந்த தாத்தாவைப் பாருங்கள். இவரால் அசையக் கூட முடியாது. சிலர், நான் சொந்த ஊரைவிட்டு வரவே மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பார்கள். இதெல்லாம் நிஜமா? நான் சொல்லும் சில தகவல்களைப பார்த்த பின் நினைத்து பதில் தேடுங்கள். பூமி சுற்றுகிறது என படித்து இருக்கிறோம், யாராவது அதனை உணர்ந்தது உண்டா...? ஆனால் பூமி தன மைய நாயகனான சூரியனை நொடிக்கு சுமார் 30கி,மீ வேகத்தில் சுற்றுகிறது. அது மட்டுமா? சூரியனும் கூட தன மையத்தைச் சுற்றுகிறது என்று சொன்னால் மூளை, ரொம்ப ஆராய்ச்சி செய்து நம்ப மறுக்கும். அது சுற்றுவது மட்டும் அல்ல.. இன்னும் சில சுவையான தகவல்களும் உள்ளனவே..!
சூரியன் நம் பார்வழி மண்டலத்திலுள்ள சுமார் 30,௦௦௦000 கோடி விண்மீன்களில் ஒன்றுதான். பால்வழி மண்டலத்தின் மையத்திலிருந்து சுமார் 26,௦௦௦ 000ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.. ஒரு ஒளியாண்டு என்பது.. ஒளி ஒரு வருடத்தில் கடக்கும் தூரம் ஆகும்.ஒளியின் வேகம். நொடிக்கு 3,00௦௦,௦௦௦ 000கி.மீ. சூரியன் தன் குடும்பத்தினரான, குஞ்சு குளுவான் களான ,கோள்கள், அதன் சந்திரன்கள், குள்ளக்கோள்கள், அஸ்டி ராய்டு வளையம், குப்பியர் வளையம், அதைத்தாண்டியுள்ள மகல்லனின் மேகங்கள் மற்றும் வால்மீன்கள் எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு , ஒரு முறை பால்வழி மண்டலத்தைச் சுற்றி முடிக்க சுமார் 22 .5 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரிய குடும்பம் உருவானதிலிருந்து இது வரை 20 சுற்றுகள் வந்திருக்கின்றன.
இப்போது மீண்டும் நமது நகர்தலுக்கு வருவோம்,சூரியனின் சுற்று வேகம் நொடிக்கு சுமார், 250 கி.மீ. சூரிய குடும்ப தாய்வீடான பால்வழி மண்டலத்தின் சுற்று வேகம் நொடிக்கு சுமார் . 300 கி.மீ . நமது அண்டங்களுக்கு இடையில் உள்ளூர் தொகுதிகள் என்ற மற்ற அண்டங்களும் உள்ளன. அவைகளின் வேகம்.. நொடிக்கு 600கி.மீ.நாம் ஆடாமல் அசையாமல், அலுங்காமல் குலுங்காமல், பால் வழி மண்டலம் என்ற பிரம்மாண்டமான ரங்கராட்டினத்தில் மணிக்கு, 8 ,04 ,500௦௦ கி.மீ வேகத்தில் பறந்து கொண்டு இருக்கிறோம் நண்பா..! இதில் நான் என் ஊரைவிட்டே நகர மாட்டேன் என்பது எவ்வளவு சாத்தியம்..!நேற்று போல் இன்று இல்லை.. இன்று போல் நாளை இல்லை நண்பா.
இன்னொரு குட்டி, கொஞ்சம் பயமான தகவல்..! நமது பால் வழி மண்டலமும், நமது அடுத்த வீடான ஆண்ட்ரோமிடா காலக்ஸ்யும் ஒன்றை ஒன்று சுமார் ௩௫௦,௦௦௦ கி.மீ வேகத்தில் நெருங்கிக்கொண்டு இருகின்றன. இரண்டும் இணைந்து ஆண்ட்ரோவழி மண்டலமாகி விடுமாம்..ஆனால் இது நடக்கப் போவது பல நுறு கோடியாண்டுகள் ஆகும். போதுமா..!

--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642

No comments: