இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது.
ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும். உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.
லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது.... மேலும் பார்க்க. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங் + உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.''
+++++++++++++++++++++
என்னுடைய வயது 25. கல்யாணம் ஆகி 5 மாதங்கள் ஆகின்றன. என்னுடைய வேலை (வேலையில் சுமார் 6 மாதம் இருந்தேன்) செல் ஃபோன் மூலம் பல நபர்களைத் தொடர்பு கொண்டு மணிக்கணக்காகப் பேசும் வேலை.
என்னுடைய ப்ராப்ளம் மே 2007 தொடங்கிற்று. எனக்கு என்னையும் அறியாமல் தானாக கண்கள் மூடிக்கொள்ளும். சில சமயம் இரண்டு விழிகளும் வண்டிச் சக்கரம் சுற்றுவது போன்ற உணர்வு. இது பத்து நாட்கள் இருந்து போய்விட்டது.
இந்தப் பிரச்னை மீண்டும் நவம்பர் மாதம் 2007 எட்டிப் பார்க்கத் தொடங்கியது. புருவத்திற்கும் கண்களுக்கும் இடையில் heaviness ஆக இருக்கும்.
சில சமயம் இடது கால், இடது பக்க முகம், தலைகளில் ஒருவிதமான மரத்துப் போகும் தன்மையும் எறும்பு ஓடுவது போலவும் இருக்கும். திடீர் திடீரென்று நடுமண்டையில் ஒரு மோட்டார் ஓடுவது போல `கிர்' என்று சுற்றும். இதனால் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டேன்.
இதைத் தொடர்ந்து ப்ரெய்ன் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, ஹார்ட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, கண் பரிசோதனை, காது பரிசோதனை எல்லாம் normal report ஆக வந்தது.
இதற்குப் பிறகு என்னை யாரோ தள்ளிவிடுவது போலவும், ஊஞ்சலில் ஆடுவது போன்ற உணர்வுகள். காதுகளில் பயங்கர அழுத்தம், காதுகளில் Popping so and. இந்த சமயத்தில் எனக்கு accute cold and cough இருந்தது.
ENT மருத்துவர்கள் Vertin, Alprax depression... மேலும் பார்க்க மாத்திரைகள் அளித்தார்கள்.
பிறகு மார்ச் மாதம் ஒரு பிரபல ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். அந்த டாக்டர் எனக்கு Vestibalar nueronitis என்று சொல்லி மருந்து தர ஆரம்பித்தார். அவரது மருந்து 3 மாதம் எடுத்துக் கொண்டு 50% grip கிடைத்தது.
ஆனால் ஒரு hill station போய் வந்த பிறகு காதில் அழுத்தமும், காலில் கிடைத்த grip-ம் போய்விட்டது. ஒரு நாளும் வீட்டில் தங்காது சுற்றிக் கொண்டிருந்த நான், இப்பொழுது நிற்கவே பயப்படுகிறேன். நான் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பொழுது normalஆக இருக்கேன்.
பின்குறிப்பு : யாரும் இல்லாத இடத்தில் இருந்தால் ரொம்பவும் மெலிதாக என் இடது காதில் சத்தம் கேட்கும். இன்று வரை தலைசுற்றியும் வாந்தி எடுத்ததேயில்லை.
இந்த மாதிரி அனுபவத்தை யாராவது உணர்ந்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ எந்த விதமான வைத்தியமாக இருந்தாலும் என் கஷ்டத்திற்கு கைகொடுக்க உங்களை மனமார உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெயர் வெளியிட விரும்பாத மும்பை சகோதரி
Tuesday, 25 May 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment