amazon associates

amazon associates

Pages

Tuesday, 25 May 2010

வாழையின் மகவத்துவம்




வாழை மரத்தின் தாவரவியல் பெயர் - Musa Paradisiaca. இது Musaceae என்னும் குடும்பத்தை சார்ந்தது. இதன் ஆங்கில பெயர் - Plantain tree... மேலும் பார்க்க இதனை மலையாளத்தில் வாழா என்றும் சமஸ்கிருதத்தில் கதலி என்றும் அழைக்கின்றனர்.
வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் மருத்துவ குணங்களும் பிற பயன்களும் உள்ளன. இம்மரத்தில் பல வகைகள் காணப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் குறிப்பாக செவ்வாழை, இரசதாளி, வாழை, நேந்திர வாழை, பேயன் வாழை போன்றன பயிரிடப்படுகின்றன.பிற மாவட்டங்களில் அடுக்குவாழை, கருவாழை, கொட்டை வாழை, நவரை வாழை, மலை வாழை, மொந்தன் வாழை, வெள் வாழை போன்றனவும் இன்னும் சிலவும் பயிராகின்றது. இவற்றின் கனிகளின் தன்மை மட்டும் மாறுபட்டு காணப்படும். அவற்றின் மருத்துவ குணங்களும் மாறும்

வாழை கிழங்கு:
வாழை மரத்தின் கருவாக இருப்பது. ஒரு கிழங்கை நாம் பயிர் செய்தால் அது வாழையடி வாழையாய் நமக்கு பயன் தந்து கொண்டே இருக்கும். இதற்குள்ள மருத்துவ பயனை பற்றி பார்த்தால் நமக்கு சற்று வியப்பாக தான் இருக்கும்.இக்கிழங்கை இடித்து பிழிந்த சாற்றினை குடித்து வர சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் இரத்தம் கலந்து வரல், பாண்டு நோய், எலும்புருக்கி நோய் முதலியவற்றிலிருந்து நாம் நம்மை விடுவித்து கொள்ளலாம்.
வாழை பட்டை:

இது உலர்ந்தபின் இதிலிருந்து எடுக்கப்படும் நார் பைகள் செய்யவும், துணிகள் நெய்யவும், பூக்கள் தொடுக்கவும் பயன்படுகிறது. மேலும் இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவித உப்பு சிறுநீர் பெருக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது
வாழை இலை

வாழை இலை என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஞாபகத்தில வருவது சாப்பாடு. இதனை நாம் பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு.

இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். மேலும் தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மேல் படுக்க வைக்கலாம். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும்.
தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை... மேலும் பார்க்க அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.
காயங்கள்- தோல் புண்களுக்கு- தேங்காய் எண்ணெயை மஸ்லின் துணி யில் நனைத்து புண்கள்மேல் போட்டு இவற்றின் மீது மெல்லிய வாழையிலையை கட்டுமாதிரி போடவேண்டும்.

சின்ன அம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்கவைக்கவேண்டும். இதை தொடர்ந்து செய்தால் குணமாகும்.
சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள்- பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். ( குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி சாம்பலை எடுத்து கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து சாப்பிட்டுவர மேற்சொன்னவை சரியாகும். )
அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம்சாப்பிட்டுவர அஜீ ரணம் சரியாகும். தொடர்ந்து 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
வாழைப் பூ:

பூ-வாழை மரம் ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது. இதன் தண்டின் நடுப்பகுதியிலிருக்கும் பூக்கள் மட்டுமே காய் ஆகும். மற்றவை ஆகாது, இப்பூவினை சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதனை வியட்னாமில் பச்சையாகவே உண்ணுகின்றார்கள்

இவ்வாறு இதனை உண்பதால் சீதக்கழிச்சல், எருவாய்க்கடுப்பு, குருதிமுனை, உடல் கொதிப்பு முதலியன தீரும். இப்பூச்சாற்றினை பனங்கற்கண்டோடு சேர்த்து உட்கொள்ள வயிற்றுப்புண் முதலிய நோய்கள் நீங்கும். மேலும் இது பத்திய உணவாகவும் கொள்ளப்படுகிறது.
சுமார் ஒரு மணி நேரம் முன்பு ·

No comments: