amazon associates

amazon associates

Pages

Tuesday, 25 May 2010

இளமைக்கு.. யார்.. காவல்..?


உப்பு




அல்டோஸ்டிரன் சுரக்கும் அட்ரீனல் .. நீர்,உப்பு மேலாளர்.



சிறுநீரகம்


பயணம்..பயணம்..
!நமக்குத் தேவையான சோடியம் என்ற தனிமத்தை சோடியம் குளோரைடு என்ற சோற்று உப்பின் மூலம்தான் எடுத்துக் கொள்கிறோம்..அதன் பணி என்ன தெரியுமா
உணவின் வழியே செல்லும் சோடியம், வயிற்றில் குடலின் உட்பக்கம், உள்ள செல்கள் மூலம் உட்கிரகிக்கப்படுகிறது. ஆனா; நாம் வாந்தி எடுத்தாலோ, வயிற்றுப்போக்கு ஏற்பட்டோலாலோ இந்த சோடியம்தான் அதனுடன் ஓடியே போய்விடுகிறது. அது உயிர் திரவத்தின் முக்கிய ஆன்மா ..!எனவேதான் , சோடியத்தின் அளவு உடலில் குறைவதால், வாந்தி வயிற்றுப்போக்கினால், உடல் தளர்ந்து ,, மயக்கம் ஏற்படுகிறது. இதனை ஈடுகட்டவே, அதிக வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, உப்பு, நீர், சர்க்கரை கலந்த நீர் கொடுக்கப்படுகிறது.
உப்பு ..நீரின்.. எஜமானர்..!
நாம் உட்கொள்ளும் சோடியத்தின் பெரும்பகுதி , சிறுநீரகத்தின் மூலமும், கொஞ்சம் தோல் வழியாக வியர்வை மூலமும், கொஞ்சம் மலத்துடனும், வெளியேற்றப் படுகிறது அல்டோஸ் டிரான் (Aldosterone ) என்ற ஹார்மோன்தான் நம் உடலின் சோடியம் தேவையையும், சமன நிலையையும் கட்டுப்படுத்தி கண்காணிக்கும் மேலாளர் ..! இது அடிவயிற்றில் , முதுகுத்தண்டை ஒட்டியுள்ள சிறுநீரகத்தின் உச்சியில், சின்ன குடுமி போல் உட்கார்ந்துள்ள அட்ரீனல் சுரப்பியின் சுரப்பு நீரே..! அதிகமான வெப்பம், வெயில், அதிகமான உடற்பயிற்சி , அதிக உடல் உழைப்பு நேரங்களில் , உடலின் வெப்பத்தை வெளியேற்ற வியர்வையை சுரக்கிறது. வியர்வை வெளியேறியவுடன், உடல் குளிர்ந்து விடுகிறது. வியர்வையுடன் சோடியம் குளோரைடும் வெளியேறும். இதனை சரிகட்டவே, இந்த சமயத்தில் நமக்கு, தாகம் எடுக்கிறது. அதனால்தான், வெயில் காலத்தில், நமக்கு வியர்வை வெளியேறி தாகம், எடுக்கும்போது, வெளியேறிய உப்பை ஈடுகட்ட, கட்டாயமாய், நாம் நீருடன் துளியூண்டு உப்பு கலந்து, அருந்துவது நலம். ஆனால் நாம் யாரும் அப்படி செய்வதே இல்லை. நண்பர்களே, இனி கோடை காலத்தில் , தாகம் ஏற்படும்போது, வியர்த்து முடிந்தவுடன், கட்டாயமாய், கொஞ்சூண்டு உப்பு சேர்த்து நீர் அருந்த்துங்கள்..!
இளமையின் .. காவலாளி..!
சோடியம், உடல் செல்களில் உள்ள பொட்டசியத்துடன் இணைந்து, செயல்புரிந்து, உடல் திரவ அழுத்தத்தையும், (automatic presssure ), நீர் அளவையும், ஒழுங்கு படுத்துகிறது. உடலின் கார-அமில சமன்நிலை, நரம்பு மூலம் செய்தி பரிமாற்றம்,(தகவல் தொடர்பு சாதனம்) தசைகளின் இறுக்கத்தை தளர்த்துதல் போன்ற வற்றை செய்கிறது. உடலுக்கு சக்தி தரும் குளுகோஸை உட்கிரகிக்கறது; இதனை செல்களின் வெளிச் சவ்வைத் தாண்டி, உணவுப பொருள்களைக் கொண்டு செல்லவும் பயன்படுகிறது...நண்பர்களே., உங்கள் காதை அருகே கொண்டு வாருங்கள்..! ஒரு ரகசியம் சொல்கிறேன்.! இந்த தொடர்பு சாதன தனிமத்தின் செல்லப் பெயர் "இளமை தனிமம்" (youth element ) ஆகும்.!ஆம், இளமைக்கான செயல்பாடுகளான உடல் வளைதல், ஓடுதல், கைகால் மூட்டுகள் இணக்கமாக செய்ல்படுதளுக்கு மிகவும் உதவுகிறது. உடலிலுள்ள தேவையற்ற பொருட்களை, நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடல் நீரை சமனப்படுத்தி, நம் வயதைக் குறைகிறது.. நண்பர்களே..! நம் இளமையின் காவல் தெய்வம் சோடியம் தனிமம்தான்.! இனி நம் உணவில் அளவான சோடியத்தை உட்கொள்ளுவோம்.
.வயிறு, நரம்பு, தசைகள் நன்கு செயல்பட சோடியம் கட்டாயம் தேவை.! சோடியம் இல்லையென்றால் கோட் (gout )என்ற எலும்பு தொடர்பான வியாதி , சர்க்கரை நோய் , வயிற்றில் அமிலத்தன்மை போன்றவை ஏற்படும். நெஞ்சு எரிச்சல் நமக்கு வயதானதும் வந்து, நம்மை உயிரை வாங்கி, அடிக்கடி தொந்தரவு செய்யும் ஒரு நச்சுபிச்சு ..! இதன் காரணியும் கூட சோடியம் குறைதான்

No comments: