amazon associates

amazon associates

Pages

Tuesday, 25 May 2010

நிறைய தண்ணீர் குடி.. நிறைய ஆரோக்கியம்.. உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை

உடல் எடை குறைய, உடலில் கலோரியை கட்டுப்படுத்த, சிறுநீரகம் மற்றும் குடல் பிரச்சினைகள் என்று எதுவும் வராமலிருக்க, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், உடல் எடை ஓரளவுதான் குறையும்.

ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே அதற்கு நல்ல பலன் கிடைக்கும். ... மேலும் பார்க்க

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையில்லை, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி கடைசியில் வெளியேறி விடுகிறது.

இப்படி செய்வதால்தான் சிறுநீரகம் மற்றும் குடல் பிரச்சினைகள் என்று எதுவும் வராது. நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
இதுதான் பலரின் கேள்வி.

* ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர் தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.

* பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

* ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.

* வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை சாற்றைப் பிழிந்தோ குடிக்கலாம்.
குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது
... மேலும் பார்க்க
பூமியின் மேற்பரப்பில் தண்ணீர்தான் மூன்று மடங்கு அடங்கியுள்ளது. அதே போல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது.

எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.

இதற்காகப் ஜில்'லென்று குளிர்ந்த தண்ணீர் நிரப்பிக் கொண்டு தொட்டிக்குள் உட்காருங்கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் மூழ்கிக் கொண்டு உடலை ஆங்காங்கே தேய்த்து விடவும்.

ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.

குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணிநேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம்.

வெளியே சென்று திரும்பியதும் உடனே அலுவலகம் செல்ல வேண்டும் எனில், பிரிட்ஜில் உள்ள அய்ஸ்கட்டிகளை தொட்டியில் போட்டு, குளிர்ந்த நீராக மாற்றி குளிக்கலாம்

No comments: