மனவியல் ரீதியாக சமூகத்தில் சிறப்புடன் இயங்க, ஒருவருக்கொருவர் இயைந்து நடக்க, அடிப்படையான தேவைகள் நான்கு. வெளிப்படை (openness), பிற நேயம் (empathy), ஏற்பு(acceptance), அக்கறை(caring... மேலும் பார்க்க) வெளிப்படையாய், நம் விருப்பு , வெறுப்பு காட்டினால் , நம் எல்லாமும், எல்லார்க்கும் தெரிந்துவிடும் என்பதும் பாதுகாப்பு தான். ஆனால் பாதுகாப்பு என்பது பல கதவுகளை பூட்டி வைப்பதை விட, சன்னல்கள எல்லாம் திறந்து வைப்பதில் தான் உள்ளது. வெளிப்படை என்பது பூரணமாக வெளிக்காட்டிக் கொள்வதல்ல. தெளிவாய் இருப்பதை உணர்த்துவது.
பிற நேயம் என்பது, மற்றவரது வருத்தங்களை உணர்ந்து கொள்வது. பிறரின் சிக்கல்கள் விளங்கினால் அவர்களை நாம் பாதிக்காமல் இருக்கலாம். நாம் பாதிக்காத எவருமே நம்மை பாதிக்கப் போவதில்லை. நாம் பாதுகாப்பாக இருக்க இதுவும் ஒரு சிறந்த வழி முறையே.
ஏற்பு என்பது, மற்றவரை நம் போல குறை, நிறையோடு ஏற்றுக் கொள்ளுதல்.இது போன்ற தன்மையை வளர்த்துக் கொண்டால், நம்மையும் அப்படியே ஏற்றுக் கொள்ள ஒருவர் இருக்கிறார் என்று நாம் நினைப்பது போலேயே, மற்றவரும் நினைக்கும் நிலை ஏற்படும். நம் வாழ்வு செழிக்க இவ்வித நிலை ஏதுவாக இருக்கும்.
மேற்கூறிய குண நலன்களை பிறர் நலத்துக்காகத் தான் நாம் காணுகிறோமே அன்றி, நம் சுயத்தை செழுமைப் படுத்த நாம் வளர்த்துக் கொள்ளும் குணங்களாக நாம் கொண்டாலே, சுய ந்லம் என்பதின் முழு அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளலாம் சுயநலம் என்பதற்குண்டான பொருளை நாம் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். சுயநலத்தின் மூலம் நாம் அடையும் நன்மைகளைத் தான் விரிவாகத் தந்திருக்கிறேன்
Tuesday, 25 May 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment