Thursday, 20 May 2010
மயங்காத..மனம்.. யாவும்.. மயங்கும்..! .
டீ செடி
டீயை சுவைத்தல் .. சீனாதான் .
பச்சை தேயிலை டீ .உடலுக்கு மிகவும் நல்லது .
சீனாவில் டீ தோட்டம்
"நீங்கள் குளிரை உணர்ந்தால்,இதமான் வெப்பம் தரும்; நீங்கள் சூடாக இருந்தால் உங்களை குளிர்விக்கும்; நீங்கள் மனச் சோர்வுடன் இருந்தால், உங்களை உற்சாகமூட்டும்,; நீங்கள் படபடப்பாக இருந்தால், உங்களை, அமைதிப்படுத்தும்".....வில்லியம் கிலாடுஸ்டோன்.
பானங்களின் மகாராணி தேநீர்தான். உலக மக்கள் தொகையில் 50 % க்கும் மேல் தேநீரை சூடாகவோ, குளிர்ச்சியாகவோ சுவைக்கின்றனர். நீருக்கு அடுத்த படியாக உலகின் பெரும்பாலான மக்களால் விரும்பி அருந்தப்படுவதும் தேநீர்தான். தேநீரின் வரலாறு மனித நாகரிகத்துடன் இணைந்தது. சுமார் 5000 ஆண்டுக்கால சரித்திரம் உடையது.இதன் கதை சுவாரசியமானது; எளிமையானதும் கூட. கி.மு.2737 ம் ஆண்டு முதன் முதலில் தேநீர் அருந்தியவர்கள் சீனர்கள்தான். அப்போது வாழ்ந்த ஷென்நுங் என்ற சீனப் பேரரசர், தனது வழிப்பயணத்தின் போது, களைப்பு மிகுதியால். ஒரு மரத்தின் கீழ் அமருகிறார். பணியாளை சுடு நீர் கொண்டு வர பணிக்கிறார். பணியாள் கொடுத்த சுடுநீரை, கையில் வைத்திருக்கும்போது, மரத்திலிருந்து, ஓர் இலை நீரில் விழுகிறது. . உடனே நீரின் நிறம் மாறுகிறது, வாசனையும் இருக்கிறது. சுவைத்துப் பார்க்கிறார். நீர் மனத்துடனும், சுவையுடனும் இருக்கிறது. அதுதான், கேமினேல்லா சைனன்சிஸ் என்ற வேதிப்பெயரால் அழைக்கப்படும்" டீ".
தேநீரை ஆசியா முழுவதும் பரப்பிய பெருமை புத்த பிட்சுக்களையே சேரும். கி.பி. 618 -907 ல் ஆண்ட டாஸ் வம்சத்தினர், தேநீரை சீனாவின் தேசிய பானமாக அறிவித்தனர்.800 களில் ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கிலாந்தில் கி.பி. 1657 ல் தாமஸ் கார்வே என்ற காபிக்கடைக்காரர்தான் முதன் முதலில், தேநீர் விற்பனை செய்தார். கி.பி. 1462 ல் இங்கிலாந்து மன்னர், இரண்டாம் சார்லஸ் , "காதரின் " என்ற போர்த்துகிசியப் பெண்ணை மணந்தார். தேயிலை அவரின் வரதட்சணைப் பொருளாக இங்கிலாந்து அரண்மனைக்குள் நுழைந்தது 1904ல் உலக வணிக பொருட்காட்சிக்கு வந்தது தேநீர். இன்ஸ்டன்ட் டீ 1940 ௦ களில் சந்தைக்கு வந்தது.
இந்தியாவில் டீ அறிமுகப்படுத்தப்பட்டதும் அப்போதுதான். புதிதாக தெருவுக்கு வந்த தேநீரை யாரும் குடிக்க வில்லை. எனவே, சென்னையில் மாலை நேரத்தின் போது, டீயை இலவசமாக வழங்கி , கூவி, கூவி கொடுத்தனர்.இந்தியாவின் பல பகுதிகளில், வீட்டின் கதவைத் தட்டிஇலவசமாக வழங்கியே டீயை மக்களிடம் அறிமுகப்படுத்தினர். முதலில் மக்கள் மறுத் தனர். பருகி பழகிய பின் தேநீரின் சுவைக்கும், மணத்திற்கும் அடிமையைனர் .. பிறகுதான். தேநீர் விலைக்கு விற்கப்பட்டது. அதன் பின் இன்று பாட்டாளியின் பானமாகியது.
--
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment